214
முஸ்லீம்களின் வர்த்தக நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் கல்லால் அடித்துக் கொலை செய்வதை ஏற்றுக்கொள்கிறேன் என்றும் கூறிய அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரின் கருத்திற்கு திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடைகளில் உணவருந்த வேண்டாம். அவர்கள் எம்முடைய சமூகத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.
அத்துடன் கருக்கலைப்பு செய்த வைத்தியரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு அளித்த நேர்காணலில் இக் கருத்துக்களுக்கு தலாய்லாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.’இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கின்ற ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவதென்பது முற்றிலும் தவறானதாகும். நாம் ஏனைய பிற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமய நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் தலாய்லாமா சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் ‘நான் ஒரு பௌத்தன். என்னுடைய முழு நம்பிக்கையும் பௌத்த சமயத்தின் மீதே இருக்கின்றது. இருப்பினும் ஏனைய அனைத்து சம்பிரதாயங்களுக்கும் ஒரேவிதமாக நான் மதிப்பளிக்கிறேன்’ என்றும் இலங்கை விவகாரம் குறித்து தலாய்லாமா கூறியுள்ளார். #முஸ்லிம்கள் #மகாநாயக்க தேரர் #தலாய்லாமா #கண்டனம் #கருக்கலைப்பு #பௌத்த
Spread the love