யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதல் சம்பவத்தில் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வலி.வடக்கு பகுதிகளில் இருந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்கள் குறித்த முகாமில் வசித்து வருகின்றார்கள். அவர்கள் மத்தியில் ஏற்பட்ட தர்க்கம் மோதலில் முடிவடைந்துள்ளது. குறித்த மோதல் சம்பவத்தில் இரு பெண்களும் 7 ஆண்களும் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மோதல் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #மோதல் #சுன்னாகம் #சபாபதிப்பிள்ளைமுகாம்
யாழ். சுன்னாகத்தில் குழு மோதல் இரு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயம்..
179
Spread the love