உலகப் பொருளாதார மந்த நிலைக்கு வித்திட்ட நீண்ட சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வர்த்தகப் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்காவும், சீனாவும் இணக்கம் தெரிவித்துள்ளன. ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கும் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
அத்துடன் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவெய்க்கு பொருட்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது,
ஒசாகாவில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டின் போது நடைபெற்ற இந்த சந்திப்பில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 300 பில்லியன் மதிப்பிலான வரியை விதிக்கப்போவதில்லை என்பதை; உறுதிப்படுத்தியுள்ள டிரம்ப் இனி சீனாவோடு பேச்சுவார்த்தையை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். #வர்த்தகப் #பேச்சுவார்த்தை #ஆரம்பிக்க #அமெரிக்கா #சீனா #இணக்கம் #us #china