பாடசாலையில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களுக்கு றப் (Tab) வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர மாணவர்களில் Pilot Project யை முன்னெடுக்கும் மாணவர்களுக்கு மாதிரமே டெப் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் றப் (Tab) வழங்கும் இத்திட்டத்தால் 175,000 பாடசாலை மாணவர்களும், 28,000 ஆசிரியர்களும் பயனடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, 5 பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டத்தினை முன்னெடுக்க தேவை இல்லை எனவும் றப் (Tab) வழங்குதவன் மூலம் நிதி வீண் விரயமாவதாகவும் ஜனாதிபதி தெரிவித்த கருத்திற்கு அமைவாகவே அமைச்சரவை தற்போதைய ஒப்புதலை வழங்கியுள்ளது. #Tab #அமைச்சரவை
இலங்கைப் பாடசாலை மாணவர்களுக்கு, Tab வழங்க அமைச்சரவை அனுமதி..
165
Spread the love