போதையிலிருந்து விடுதலையான தேசம் எனும் நிகழ்ச்சித்திட்டம் இவ்வாரம் பரவலாக நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் நெறிப்படுத்தலின் கீழ் இந்நிகழ்ச்சிதிட்டம் பல்வேறு கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் எமது பிரதேசத்தில் போதைப்பொருள்களின் பாவனை கூடிவருவதனை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக உள்ளன.எமது எதிர்கால சந்ததியினரை அதிகளவு இப்போதைப்பொருள் பாதித்துக்கொண்டிருக்கின்றது.
எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட சகல விதமான உதவிகளையும் உளநலம் சார்ந்த விடயங்களையும் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட தேவையான உளவள ஆலோசனைகளையும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் உளநலப்பிரிவு வழங்குவதாகவும் பொத்துவில் திருக்கோவில் அக்கரைப்பற்று பாலமுனை நிந்தவூர் காரைதீவு சாய்ந்தமருது கல்முனை மருதமுனை மத்தியமுகாம் சம்மாந்துறை இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட தினங்களில் நடைபெறும் உளநலசிகிச்சைகளில் ஆலோசனைகளை பெற்றுக்டிகாள்ள முடியும் என கல்முனை பிராந்திய சேவை கள் பணிப்பாளர் பணிமனை உளநலப்பிரிவு தெரிவித்துள்ளது. #போதையிலிருந்து #விடுதலை #தேசம் #நற்பிட்டிமுனை #விழிப்புணர்வு