ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேறியுள்ளது ஜம்மு காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்துவந்த ஆதரவை பாஜக திரும்பப்பெற்றதையடுத்து, முதல்வராக இருந்த மெஹபூபா முப்தி தனது பதவி விலகியதனையடுத்து 2018 ஜூன் மாதம் அங்கு ஆளுநர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்த ஆளுநர் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் இருந்து வருகிறது. ஜூலை 3ஆம் திகதியுடன் அது முடிவடைய இருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் மசோதா கடந்த 28ஆம் திகதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் நேற்றையதினம் மக்களவையில் நிறைவேறியுள்ளது
இதன்மூலம் எதிர்வரும் 3ஆம் திகதியிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.