சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தைப் பணமாகக் கொடுத்தால் அபராதம் வசூலிக்கும் நடைமுறை விரைவில் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டதனையடுத்து சுங்கக் கட்டணத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகச் செலுத்தும் நடைமுறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.
வாகனங்களின் முன்பக்கக் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள் தானாக ஸ்கான் செய்யப்பட்டு, அந்த வாகனத்துக்கான சுங்கக் கட்டணம் அதன் வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாகப் பெறப்படும். இந்நிலையில் சுங்கச் சாவடிகளில் டிஜிட்டல் வழிக் கட்டணங்களை மட்டுமே ஏற்கும் விதிமுறை விரைவில் அமுலுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுங்கச் சாவடியைக் கடந்துசெல்லும் வாகனங்களிடம் டிஜிட்டல் வழிக் கட்டணங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ரொக்கப் பணமாக வழங்கினால் அதற்குக் 10 முதல் 20 சதவிகிதம் வரையில் அபராதம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #சுங்கச் சாவடி #சுங்கக் கட்டணம் #அபராதம்