இந்தோனேசியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரு விமான விபத்துகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 100 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கவுள்ளதாக போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து இரு விபத்துகளில் சிக்கியதில் 346 பேர் உயிரிழந்திருந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு இவ்வாறு இழப்பீடு வழங்குவதாக போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இழப்பீடு உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கல்வி மற்றும் ஏனைய செலவுகளுக்கு வழங்கப்படும் எனவும் போயிங் தெரிவித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்கள் இதனை ஏற்க மறுத்துள்ளனர்.
இந்த இரு விமான விபத்துகளை தொடர்ந்து 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவது உலகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #இந்தோனேசியா #எத்தியோப்பியா #விமானவிபத்து #இழப்பீடு #போயிங்