மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பல அடுக்குகள் கொண்ட விடுதிக் கட்டிடம் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடித்தழிக்கப்பட்டுள்ளது. சாந்தி பலஸ் என்ற பெயரில் 20 கோடி செலவில் கட்டப்படும் இந்த விடுதி 100 அறைகள் கொண்ட பல அடுக்குகள் கொண்ட வகையில் அமைந்திருந்தது.
எனினும் குடியிருப்பு காலனிக்காக ஒதுக்கீடு செய்த நிலம், சட்டவிரோத முறையில் வாங்கப்பட்டு அதில் விடுதி கட்டப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மாநகராட்சி அதிகாரிகளும் உடந்தை எனவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதுபற்றிய வழக்கு 10 வருடங்களுக்கு மேலாக நீடித்த நிலையில், வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுதியை இடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து விடுதி உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதும் உயர் நீதிமன்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது.இதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் அந்த விடுதியை வெடிவைத்து தகர்த்துள்ளனர். கட்டுமானப் பகுதிக்குள்ளேயே கட்டிடம் இடிந்து விழும் வகையில் வெடிவைத்து தகர்க்கப்பட்டதனால், ஒரு சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. சட்டவிரோத பல அடுக்குகள் கொண்ட விடுதிக் கட்டிடம் வெடிவைத்து தகர்ப்பு #சட்டவிரோத #விடுதிக் கட்டிடம் #வெடிவைத்து #தகர்ப்பு