முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று 108 பானைகளில் பொங்கும் பொங்கல் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அப் பகுதியில் அடாத்தாக விகாரை அமைத்து தங்கியுள்ள பிக்கு மற்றும் காவல்துறையினர் பொங்கல் நடவடிக்கைகளுக்குஇடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
பொங்கலுக்கான அடுப்புகளை ஆலய வளாகத்தில் ஒழுங்கு செய்யும் போது அடுப்புக்களை குறித்த பிக்கு கட்டடம் அமைத்துள்ளபகுதிகளில் வைக்க வேண்டாம் என்று பிக்குவின் வேண்டுகோளுக்கு இணங்க காவல்துறையினர் தடைவிதித்துள்ளனர்.
அத்துடன் அடுப்புகளை வீதியில் வைத்து பொங்குமாறும் காவல்துறை அடியவர்களுக்கு கூறியுள்ளது. ஆலய வளாகத்திலேயே பொங்கல் செய்ய வேண்டுமெனஅவர்கள் கூறியுள்ளனர். எனினும் பிக்கு காவல்துறையை வைத்து அடியவர்களை வெளியேற்றியுள்ளார்.
இந்த நிலையில் ஆலய வளாகத்தை விட்டு பிக்குவின் வெளியேற்றப்பட்ட பக்தர்கள் முல்லை செம்மலை வீதியின் இரு மருங்கிலும் அடுப்புகளை வைத்து பொங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளனதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. #முல்லைத்தீவு #செம்மலை #நீராவியடிப் பிள்ளையார் #பொங்கல்நிகழ்வு