அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்காக எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளதாக, ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.
நாட்டில் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்தி அமைதியான நிலைமைகள் ஏற்படுத்தவதற்காக இக்கட்டான நிலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் தங்களின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போதைய அரசியல் நிலைமைகள், முஸ்லிம்களுக்கு எதிராக தொடரும் நெருக்கடியான நிலைமைகள், கல்முனை வடக்கு உப பிரிவைத் தரமுயர்த்துதல், மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றல், உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
இதேநேரம், முதற்கட்டமாக ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து தமது சமுகம் சார்ந்த கருத்துக்களை முன்வைத்திருந்ததாகவும். மீண்டும் அத்தலைவர்களை நேரில் சந்திப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஏ.எச்.எம் பௌசி குறிப்பிட்டுள்ளார். #ஏஎச்எம்பௌசி #முஸ்லிம்பிரதிநிதிகள்