150
கட்சி தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற்றதாகவும், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள காணி தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சட்டம் தொடர்பில் இதுவரையில் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தில் எடுக்காமல் இருப்பதற்கு இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. #சபாநாயகர் #கருஜயசூரிய
Spread the love