இலங்கை பிரதான செய்திகள்

மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, 6 ராஜபக்ஸக்கள் முயற்சி…


அரசாங்கத்தை இலகுவில் கையளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்னும் 6 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியே வைத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் 6 வருடங்களுக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னோக்கிக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மொட்டின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு, 6 ராஜபக்ஸக்கள் இணைந்திருப்பதாகத் தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியில் இவ்வாறானதொரு குடும்ப ஆதிக்கம் இல்லை என்றும் தெரிவித்தார். வெற்றிப்பெறும் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யவுள்ளதுடன், இதற்காக ஐ.தே.கட்சியின் வாக்குகள் மட்டுமல்ல வடக்கு, கிழக்கின் வாக்குகளையும் பெற வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். #லக்ஷ்மன்கிரியெல்ல #ஜனாதிபதி  #ஐக்கியதேசியக்கட்சி #ராஜபக்ஸக்கள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.