பிரான்ஸில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்ணுரிமை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து பாரிஸின் மத்திய பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களும் உலகில் வாழ வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 74 பெண்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அதனை நினைவுகூரும் முகமாக, ஆர்ப்பாட்டக்காரர்களால் 74 செக்கன்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2017 ஆம் ஆண்டில் மாத்திரம் கணவர் அல்லது துணையினால் 130 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், பெண்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுப்பதற்கு பரந்தளவில் ஆலோசனைகள் நடத்தப்பட்டுவருவதாக பிரான்ஸின் பாலின சமத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. #பிரான்ஸில் #பெண்ணுரிமை அமைப்புகள் #வன்முறைகளை #ஆர்ப்பாட்டம்