அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (11.07.19) இடம்பெற உள்ளது. குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசிய கட்சி செயற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். #நம்பிக்கையில்லாப்பிரேரணை #ஐக்கியமக்கள்சுதந்திரக் கூட்டமைப்பு #ஐக்கியதேசியகட்சி
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று…
156
Spread the love