இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

பொகவந்தலாவயில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

பொகவந்தலாவ காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 12.07.2019 அன்று காலை பொகவந்தலாவ காவல்துறையினரினால் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ள பொகவந்தலாவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.#பொகவந்தலாவ #சட்டவிரோத #மாணிக்ககல் #கைது
(க.கிஷாந்தன்)

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.