இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதற்தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிக்கும் எதிர்பார்ப்புடன் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன.
கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடாக இங்கிலாந்து புகழப்பட்டாலும் , 44 வருட உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் ஒருமுறையேனும் கிண்ணத்தை சுவீகரிக்கவில்லை. அதிக சந்தர்ப்பங்களில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அணியாக பதிவாகியுள்ள இங்கிலாந்து, 27 வருடங்களின் பின்னர் இவ்வருடம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேவேளை கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தும் இதுவரையில் எந்தவொரு உலகக் கிண்ணத்தையும் சுவீகரித்ததில்லை.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் இதுவரையில் 90 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 43 போட்டிகளில் நியூசிலாந்தும் 41 போட்டிகளில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றுள்ளன.
உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் விளையாடும் முதல் சந்தர்ப்பமாக இன்றைய போட்டி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது #முதற்தடவை #உலகக்கிண்ணத்தை #சுவீகரிக்கும் #இங்கிலாந்து #நியூசிலாந்து,