காங்கேசன்துறைக் கடற்பரப்பில் பணி முடிந்து 12ம் திகதி கரை திரும்பிய கடற்படைச் சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் 28 வயதுடைய சாமல்லசங்க- வெந்தசிங்க, என்னும் ககொஸ்வத்த, கொரனையைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
காங்கேசன்துறைப் பகுதியில் பணியில் இருந்த கடற்படை கப்பல் ஒன்று பணி முடித்து துறைமுகம் திரும்பிய நிலையில் அதில் இருந்த கடற்படையினர் தரை இறங்கியுள்ளனர். இதன்போது குறித்த கடற்படைச் சிப்பாயும் தரை இறங்கியுள்ளார். இவ்வாறு தரை இறங்குவதற்காக அருகில் இருந்த ஓர் மின் கம்பத்தை பற்றிப் பிடித்துள்ளார். அவ்வாறு பற்றிப் பிடித்த மின்கம்பத்தில் மின் ஒழுக்கு ஏற்பட்டு இருந்துள்ளது. இதனால் மின்சாரத் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார்.
மாலை 6.30 மணியளவில் மின்சாரத்தாக்கததிற்கு உள்ளானவரை கடற்படையினரின் வைத்தியசாலையில் அனுமதித்து அங்கிருந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 7.30 மணியளவில் அனுமதித்தபோதும் குறித்த கடற்படை சிப்பாய் ஏற்கனவே உயிரிழந்திருந்தமையினை வைத்தியர்கள் உறுதிசெய்தனர். இவ்வாறு உயிரிழந்த கடற்படைவீரரின் மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்