180
வெயாங்கொட காவற்துறைப் பிரிவில் வதுரவ புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று, இன்று (15.07.19) காலை 6.45 மணி அளவில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளத காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவற்துறைனர் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் வத்துபிடிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெயாங்கொட காவற்துறைனர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love