நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக தெரிவித்து ஈரானின் சுப்பர் டாங்கர் கிரேஸ் 1 என்ற எண்ணெய் கப்பல் பிரித்தானிய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டதனால் இருநாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிபந்தனைகளின் பேரில் ஈரானின் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஈரானுடனான பிரச்சினையை தீர்க்கவே விரும்புகிறோம் எனவும் சிரியாவுக்கு எண்ணெய் எடுத்து செல்லமாட்டோம் என உத்தரவாதம் அளித்து, நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் எண்ணெய் கப்பலை விடுவிக்க தயாராக இருக்கிறோம் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரேமி ஹண்ட் தெரிவித்துள்ளார்.
எனினும் பிரித்தானியாவின் இந்த நிபந்தனையை நிராகரித்துள்ள ஈரான் எந்த சூழ்நிலையிலும் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளதுடன் சிறைபிடித்து வைத்துள்ள தங்களது எண்ணெய் கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. #பிரித்தானியா #நிபந்தனை#ஈரான், #நிராகரிப்பு #சிரியா