பிரதான செய்திகள் விளையாட்டு

தரவரிசையில் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிக்கிறது

உலகக்கிண்ணத்தினைக் கைப்பற்றியதன் மூலம் இங்கிலாந்து அணி ஐசிசியின் தரவரிசையில் தொடர்ந்தும் முதல் இடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை பவுண்டரிகள் அடிப்படையில் வென்று இங்கிலாந்து கி;ணத்தினைக் கைப்பற்றியிருந்தது.

உலகக்கிண்ணத் தொடர் தொடங்குவதற்கு முன் தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்திலேயே இருந்த போதும் தொடரின் லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக சில தோல்விகளை சந்தித்ததால் 2-வது இடத்திற்கு பின் தங்கியிருந்தது. அதன்பின் இந்தியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதும் மீண்டும் இங்கிலாந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தற்போது 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 112 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், அவுஸ்திரேலியா 111 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #தரவரிசை  #இங்கிலாந்து #முதலிடத்தில் #உலகக்கிண்ண

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.