ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்களை நியமனம் செய்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆந்திரப் பிரதேச ஆளுநராக 2009ஆம் ஆண்டிலிருந்து பதவி வகித்து வந்த இ.எஸ்.எல்.நரசிம்மன் 2014ஆம் ஆண்டு தெலங்கானா, ஆந்திரம் என இரண்டு மாநிலங்களாகப் பிரிந்த பின்னரும் ஆளுநராக தொடர்ந்து வந்தார். அதேவேளை சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பல்ராம்ஜி தாஸ் கடந்த ஆண்டு காலமானதையடுத்து, மத்தியப் பிரதேச ஆளுநரான ஆனந்திபென் பட்டேல் அங்கு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு வகித்தார். இந்த நிலையில், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் சிரேஸ்ட தலைவரான 84 வயதான பிஷ்வபுஷன் ஹரிசந்தனை ஆந்திராவின் ஆளுநராகவும், பெண்களுக்கு, குறிப்பாக பழங்குடியின பெண்களின் நீதிக்காக குரல்கொடுத்து வரும் 62 வயதான அனுசியா உய்கேய் சத்தீஸ்கர் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், நேற்று முன்தினம் இமாச்சலப் பிரதேசத்துக்குப் புதிய ஆளுநராக கல்ராஜ் மிஷ்ராவை குடியரசு தலைவர் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஆந்திரம் – சத்தீஸ்கர் மாநிலங்களுக்குப் புதிய ஆளுநர்கள் நியமனம்…
151
Spread the love