இந்தியக் கடற்படைக்கு நடுத்தர ஏவுகணைகளை விநியோகிக்க 50 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று கையெழுத்திட்டுள்ளது.
மேம்பட்ட ஏவுகணைகள் மட்டுமல்லாமல் ஏவுகணை பராமரிப்பு, துணை அமைப்புகள் உள்ளிட்ட சேவைகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ளது என இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வான்வழி ஏவுகணைகள், கடல்வழி ஏவுகணைகள், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், டிஜிட்டல் ரேடார், லோஞ்சர்கள், இன்டர்செப்டார்கள் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் இந்தியாவுக்கு விநியோகிக்கவுள்ளமை குறிப்பிபடத்தக்கது. #இந்தியக் கடற்படை #ஏவுகணை #இஸ்ரேலுடன் #ஒப்பந்தம்