அமெரிக்க காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மெக்சிகோவை சேர்ந்த கடத்தல்காரரான குவாக்கினோ சாப்போவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் மற்றும் முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2015ம் ஆண்டு மெக்சிகோ சிறையிலிருந்து தப்பிய இவர் பின்னர் மீண்டும் கைது செய்யப்பட்டு 2017ம் ஆண்டு அமெரிக்காவுக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டார்.
மெக்சிகோவில் ல் தனியாக ஒரு போதை மருந்து சாம்ராஜியமே இவர் நடத்தி வந்துள்ளார். 2009ம் ஆண்டு உலக பணக்காரர்கள் வரிசையில் 701ம் இடத்தில் இருந்த இவருடைய அப்போதைய சொத்து மதிப்பு ஒரு பில்லியன் டொலர்கள் ஆகும்.
இதேவேளை தன் மீதான விசாரணை முறையாக நடைபெறவில்லை என நீதிமன்றத்தில் அவர் வாதிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #அமெரிக்க #காவல்துறையினருக்கு, #மெக்சிகோ#கடத்தல்காரருக்கு #ஆயுள்தண்டனை