216
2008 ஆம் ஆண்டு ஆயுத குழு ஓன்றினால் கடத்தி செல்லப்பட்டு சுட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.
மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றிய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சடலத்தினை தோண்டு நடவடிக்கை கடந்த 11.06.2019 மாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 2008 ம் ஆண்டு கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் வயது (25) என்ற காவல்துறை உத்தியோகத்தர் கொக்கட்டிச்சோலை காவல்நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்றிருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் தனது இறுதி நாள் கடமையினை மேற்கொள்வதற்காக காவல் நிலையத்தில் இருந்து வெளியில் சென்றிருந்த நிலையிலேயே இவர் காணாமல் போயிருந்தார்.
இந்த நிலையில் காணாமல் போயுள்ள. காவல்துறை உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிழன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன், என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப்புலனாய்வுத்துறையினர் கைது செய்திருந்தனர்.
இவர்களிடம் மேற் கொண்ட விசாரனையில் காணாமல் போயுள்ள காவல்துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டு கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சடலத்தை தோண்டி எடுப்பதற்கு சிஜடி சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வியாழைக்கிழமை (23) அனுமதிகோரியிருந்தமையின் அடிப்படையில் சடலத்தை மட்டக்கப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான எச்சங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றவாளிகலாக 7 பேர் இனங்காணப்பட்ட நிலையில் கபிலன் எனப்படும் சந்தேக நபர் ஏலவே இறந்துள்ளதுடன், இனியபாரதி மற்றும் சின்னத்தம்பி ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருப்பதாதாவும் ஏனைய நால்வரில் ஒருவரான மகிழன் எனப்படுபவர் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைவாக தோண்டப்படும் இடத்திற்கு தயானந்தன், மதன், என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு கடந்த முறை தோண்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது அழைத்துவரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது எந்தவித மனித எச்சங்களும் இது வரை மீட்கப்படாத நிலையில் தோண்டும் பணிகள் தொடர்கிறது. #பரிசோதனை #காவல்துறை #சடலம் #தோண்டி #ஆயுத குழு #கொக்கட்டிச்சோலை
பாறுக் ஷிஹான்
Spread the love