Home இலங்கை சிமாட் லாமும், யாழ் மாநகர சபையும், வரதராஜன் பார்த்திபனின் உரையும்…

சிமாட் லாமும், யாழ் மாநகர சபையும், வரதராஜன் பார்த்திபனின் உரையும்…

by admin

யாழ்.மாநகர சபையின் நேற்றைய அமர்வின் போது சிமாட் லாம் போல் என்ற பெயரில் நிறுவப்படுகின்ற தொலைத் தொடர்புக் கோபுரங்கள் பற்றி வரதராஜன் பார்த்திபன் ஆற்றிய உரையின் முழுவடிவம்

ஸ்மாட் போல்கள் தொர்பிலான ஒப்பந்தத்தில் கூறப்பட்ட 6 அதிகார சபைகளில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதற்கு அப்பால் பல முரண்பாடுகள் அதில் காணப்படுகின்றன வைகாசி மாதம் இடம் பெற்ற மாநகர சபைக் கூட்டத்தில் கம்பத்தில் பொருத்தப்படும் பொருட்கள் அனைத்திற்கும் மாநகரசபையின் திட்டமிடல் பகுதியில் அனுமதி பெற்று பொருத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. என்னுடைய கேள்வி குறித்த கம்பம் அமைப்பதற்கு யாழ்.மாநகர சபை திட்டமிடல் பகுதியில் அனுமதி பெறப்பட்டதா?

ஏன்என்றால் தற்போது யாழ்.மாநகர சபை எல்லைக்குள் வெட்டப்படுகின்ற கிடங்குகள் அனைத்தும் யாழ்.மாநகர சபையின் வீதி ஓரங்களில் அதாவது வீதியின் சோல்டர்களில் வெட்டப்படுகின்றன. இதற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது. ஒரு சாமானிய குடிமகன் ஒரு தனது வீடுக்கு ஒரு மதிலைக்கட்டுவது என்றால் எத்தனையோ புறிசியர்கள். ஆனால் இவ்வளவு பெரிய கோபுரம் ஒன்றை அமைக்கும் போது எந்த புறசியரும் பின்பற்றத் தேவையில்லையா?

2019.06.21 அன்று வெளியிடப்பட்ட வர்த்தகமானியில் யாழ்.மாநகர சபையின் அதிகாரத்திற்குட்பட்ட வீதிகள், அதனுடைய நீளம் மற்றும் வீதிக் கோட்டு எல்லை என்பன வெளியிடப்பட்டன. உதாரணமாக நல்லூர் செட்டித்தெரு வின் வீதிக்கோட்டு எல்லை 20 அடி என்று உள்ளது அதே போல் கஸ்தூரியார் வீதி யின் வீதிக்கோட்டு எல்லை 33 அடியாக உள்ளது அவ்வாறு எல்லாம் இருக்கும் போது இரு வீதிகளிலும் வெறும் 10 அடிக்குள் எவ்வாறு குறித்த பாரிய கம்பம் நடுவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது. மேற்படி கோபுரங்கள் குறித்த இடங்களில் அமைக்கும் போது யாழ்.மாநகர சபையில் அதனுடைய திட்டவரைபினை கொடுத்து அனுதிச்சான்றிதழ் பெற வேண்டும் என்பது நியதி. அந்த நியதி இத்திட்டத்தில் பின்பற்றப்படவில்லை.

இங்கு அமைக்கப்பட்டுள்ள கோபுரங்களின் அடித்தளம் எவ்வளவு உறுதியானது? அதன் அடித்தளத்திற்குரிய ஆழம் எவ்வாளவு? அதனுடைய கொங்கிறீட்டின் திக்னஸ் எவ்வளவு என்பது போன்ற எந்த ஒரு அடிப்படைத் தரவுகள் கூட எம்மிடம் இல்லை. அது மட்டுமல்ல குறித்த கோபுரத்தின் திக்னஸ் என்ன? அது என்ன உலோகத்தால் செய்யப்பட்டது? என்பது கூட எமக்கு தெரியாது . குறித்த கோபுரங்களின் அடித்தளத்தின் உறுதியின் தன்மை மற்றும் கோபுரத்தின் உறுதியின் தன்;மை போன்ற விபரங்கள் எதுவும் இல்லாமல் இடத்தை காட்ட அது நிறுவப்படுகின்றது . இந் நிலையில் அக் கோபுரம் சரிந்து விழாது என்பதனை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்.

அத்துடன் 1986 ஆம் ஆண்டு 03 மாதம் 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தகமானப் பத்திரிகை அறிவித்தலின் படி நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டட விதிகளில் பவுண்டேசன்ஸ் என்ற தலைப்பின் கீழ் உள்ள பிரிவு 55 – 57 க்கு அமைவாக அனுமதி பெறப்படல் வேண்டும் ஆனால் அந்த அனுமதியும் பெறப்படவில்லை.

2009 ஏப்பிரல் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவித்தலின் படி 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் பிரகாரம் அனுமதி பெறவேண்டும்.

கௌரவ முதல்வர் அவர்களே கடந்த வரவு செலவுத்திட்டத்தில் உறுப்பினர்களின் வெளிநாட்டு பயணத்திற்காக 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது அதை நாங்கள் நிராகரித்து விட்டோம் நாங்கள் வெளிநாடு செல்லவில்லை. ஆனால் கௌரவ முதல்வர் ஆகிய நீங்கள் முன்னர் கௌரவ மாகாணசபை உறுப்பினராக இருக்கும் போதும் தற்போது கௌரவ முதல்வராக இருக்கும் போது நீங்கள் பல நாடுகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள் அந்தவகையில் தங்களிடம் நான் கேட்பது

தற்போது நிறுவப்படுகின்ற நீங்கள் கூறுகின்ற இதே சிமாட் லாம் போல்கள் தான் வெளிநாடுகளிலும் உள்ளதா?

உண்மையான முக்கியமான விடயம் யாதெனில் இங்கு நிறுவப்படுவன எவையும் சிமாட் லாம் போல்கள்அல்ல.

அவ்வாறு எனில் இவை எவை?
சிமாட் லாம் போல்கள் என்ற போர்வையில் நிறுவப்படுகின்ற இவை அனைத்தும் தொலைத்தொடர்பு கோபுரங்கள்
3 Legged angular Tower, 4 Legged angular Tower, 3 Legged Tubular Tower என்ற தொலைத்தொடர்பு கோபுரங்களின் வகைகள் என்ற வரிசையில் தற்போது நீங்கள் சுமாட்லாம் போல் என்று கூறிக்கொண்டு நிறுவுவதன் உண்மையான பெயர். Monopole tubular tower

வெளிநாட்டில் இவ்வாறான தொலைத் தொடர்பு கோபுரங்கள் தான் இப்போது அமைக்கப்படுகின்றன. இவை எதற்காக அமைக்கப்படுகின்ற என்றால்
இந்த மொனோபோல் தொலைத்தொடர்பு கோபுரம் குறுகிய கட்டுமாண சுழற்சி, குறைந்த ஒட்டுமொத்த செலவு, எளிதான நிறுவல் மற்றும் பராமரிப்பு, குறைந்த நில தேவைப்பாடு போன்ற பல நன்மைகளைக் கொண்டிருக்கின்றபடியால் தற்போது இவ் வகையான தொலைத் தொடர்பு கோபுரங்கள் தான் அமைக்கப்படுகின்றன.
இவை எதற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று பார்த்தால் Telecommunication and Broadcasting தேவைகளுக்காக. அதாவது இது மொபைல் டிரான்ஸ்மிஷன் சிக்னல் கவரேஜ்ற்கான ஒரு வகையான உள் கட்டமைப்பு கட்டுமானமாகும்.

யாழ்.கஸ்தூரியார் வீதியில் வீதிக்கருகில் ஒரு தொலைத் தொடர்புக் கோபுரமும் அதற்கு சற்று அருகில் ஒருவருடைய வீட்டிலும் அதே போலான ஒரு தொலைத் தொடர்புக் கோபுரமும் நிறுவப்படுகின்றன. யாழ்.கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படுவது சிமாட்லாம் போல் என்றும் ஒரு தனியார் வளவுக்குள் அமைப்பது தொலைத் தொடர்புக் கோபுரம் என்றும் எவ்வாறு சொல்லப்படும். ஒரே கோபுரம் வேறு வேறு இடங்களில் நிறுவப்படும் போது வேறு வேறு பெயர்கள் கொண்டுதான் அழைக்கப்படுமா?
ஆக தற்போது எங்களுடைய பிரதேசங்களில் நிறுவப்படுகின்ற இவை Monopole tubular tower வெளிப்படை

இது சிமாட் லாம் போல் இல்லை என்றாகிவிட்டது.
அப்ப சிமாட் லாம் போல் எதுவாக இருக்கும்
ஒரு புதுமையான கலாச்சாரத்தின் பகுதியாக சிமாட் சிற்றிகளில் அதன் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்குடன் அமைக்கப்படும்.
இந்த சிமாட் லாம் போல்களில் என்ன என்ன நிறுவப்படும் என்றால் Security Cameras, Batteries, Street Signs,, Solar Panels, Lamp, , Environmental Sensors, Electric vehicle Charger, Wi-Fi Hotspot

சின்ன பிள்ளையல் போல் சொல்லுற ஒரு விடயம் கார்க்கு சார்ஜ் போடலாம். தற்போது பூட்டப்படுகின்ற கோபுரங்களில் அந்த காருக்கு சார்ச் போடுகின்ற விடயம் இருக்கின்றதா என்பது கூட சந்தேகம். சரி தற்போது நிறுவப்படுகின்ற கோபுரங்களில் காருக்கு சார்ஜ் போடலாம் என்று வைத்துக் கொள்ளுவம்

செட்டித் தெருவில் வீதியோரத்தில் ஒரு கோபுரம் இருக்கு அந்த வீதியின் அகலம் 3 மீற்றர் அந்த 3 மீற்றர் அகலம் உள்ள வீதியில் ஒரு காரை நிறுத்தி சார்ஜ் போடலாமா?
உருத்திரபுரத்தில என்னும் வீதி கட்டுமானங்களே ஒழுங்காக இல்லாத நிலையில் ஒரு வீட்டுவளவுக்குள் இக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அவருடைய வீட்டு வளவுக்குள் போய் தான் சார்ஜ் போடுவதா? வலி வடக்கில ஒரு மயானத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது இந்த உலகத்தில ஒரு மாயானத்திற்குள் ஒரு சிமாட் சிற்றிக்குரிய சிமாட்போல் போன்ற ஒன்றை அமைத்து காருக்கு சார்ஜ் போடலாம் என்கின்றீர்கள்.

எங்களுக்கு இப்போது வெளிப்படையாக ஒன்று தெரிகின்றது என்னவென்றால் தற்போது நிறுவப்படுகின்ற கோபுரங்களில் இருந்து தான் இனி வரும்காலங்களில் நிறுவப்படபோகின்ற சிமாட் லாம் போல்களுக்கு சிக்னல் பெறப்படப்போகின்றது. அக இக் கோபுரங்களுக்கு மேலதிகமாக எனி தான் சிமாட் லாம் போல்கள் நிறுவப்படப் போகின்றன. என்னுடைய கேள்ளி தற்போது நிறுவப்படுகின்ற மொனோபோல் ரவர்களளை சிமாட் லாம் போல்கள் என்று கூறி நிறுவி விட்டீர்கள் எனி நிறுவப் போகின்ற சிமாட் லாம் போல்களுக்கு என்ன பெயர் வைத்து நிறுவப் போகின்றீர்கள்.

நல்லூர் கோவிலைச் சுற்றி 4நான்கு கோபுரம் அமைக்கப்படுகின்றது கிட்டத்தட்ட 200 , 300 மீற்றர் இடைவெளிக்குள். எல்லா இடத்திலும் தூர தூர இடங்களில் இந்த கோபுரங்களை அமைத்து விட்டு இங்கு மட்டும் ஏன் 4 கோபுரத்தை அமைக்கின்றார்கள் என்றால் அதற்கும் காரணம் இருக்கின்றது. ஒரே காரணம் நல்லூர் கோவில் பெருந்திருவிழா. திருவிழா காலங்களில் அங்கு லட்சணக் கான மக்கள் வருவார்கள் , தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரலை செய்வதற்கு வருவார்கள் . என்பதனை கருத்திற் கொண்டே அந்த டவர்கள் நிறுவப்படுகின்றன.

5G தொழில் நுட்பத்தில் விரும்பிய டிவைசுக்கு விரும்பிய வேகத்தை கொடுக்கலாம் அதாவது ஒரு தொலைக்காட்சி நிலையத்திற்கு இந்த அளவு வேகத்தையும் இன்னொரு தொலைகாட்சசி நிறுவனத்திற்கு இன்னொரு வேகத்தையும் கொடுக்கலாம் .

கௌரவ முதல்வர் அவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த ஸ்மாட் லாம்பால்களில் தற்போது கமாராக்களும் மின் விளக்குகளும் இடி தாங்கிகளும் தான் பூட்டப்படுகின்றன. அதில் அன்ரனாக்கள் பூடடுவது என்றால் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் சபையின் அனுமதி பெறப்பட்டாலே பொருத்த முடியும் என்று கூறினார். ஆனால் யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள கோபுரத்தில் எவ்வாறு யாருடைய அனுமதியுடன் பொருத்தப்பட்டது. பொருத்தப்பட்ட அந்த அன்ரனாக்கள் எவ் தொழில்நுட்பத்திற்குரியது.

யாழ்.மாநகர சபையின் ஆதனத்தை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடல்
மாநகர சபைக்கட்டளைச்சட்டத்தின் 40(F) ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய 35,37ஆம் பிரிவுகளின் பிரகாரம் உரித்தாக்கப்பட்ட ஆதனங்கள் அல்லது வேறுவகையாக சபைக்கு உரித்தாக்கப்பட்ட ஆதனங்களை விற்றல், குத்தகைக்கு வழங்குவதற்கு அமைச்சரின் அனுமதி பெறப்படவேண்டும். அதற்போது அமைச்சர் இல்லாத காரணத்தினால் ஆளுனரிடம் அனுமதி பெறவேண்டும்.
35. Lands vested in Municipal councils.
There shall be vested in the Municipal Council of each Municipality all such immovable property of the following classes, namely—
(a) waste lands;
(b) stone, gravel and cabook quarries;
(c) lakes, ponds, reservoirs, tanks, aqueducts and other waterworks;
(d) State lands, whether with or without buildings,
as may be situate within the limits of the Municipality and may be or have been made over, with the sanction of the President or the Governor-General, as the case may be, to the Council under this Ordinance or under any repealed enactment.

37. Other property vested in Municipal Councils.
(1) There shall be further vested in each Municipal Council, for the purposes of his Ordinance, the following classes of property—
(a) all public parks, gardens and open spaces acquired by or otherwise transferred to the Council, and all erections and other structures therein and the equipment thereof subject always to the terms of any trust or the conditions in any instrument by which any such property may have been transferred to the Council;
(b) all streets within the Municipality (except such streets as may be specially exempted by the President) together with the pavements, stones and other materials thereof and also all erections, materials, implements and things provided therefor;
(c) all public markets and all works, erections or structures for the benefit or convenience of the public which may be constructed, erected or provided under this Ordinance or which may have been constructed, erected or provided under any repealed enactment, or which may be otherwise transferred or have been transferred to the Council, and all the sites, reservations, appurtenances, materials, furniture and equipment provided therefor, subject always to any such trust or condition as aforesaid;

40. General powers.
(f) to sell by public auction or, with the prior approval in writing of the Minister, to sell otherwise than by public auction, or to lease, either in block or in parcels—
(i) any land or building vested in the Council by virtue of section 35 or section 37 if the prior sanction of the President has been obtained by the Council, and
(ii) any other land or building of the Council, subject to the terms and conditions of the instrument by which the land or building was vested in or transferred to the Council, unless the sale or lease is prohibited by such instrument;

குறித்த ஆதனத்தின் குத்தகைப்பெறுமதி தொடர்பாக விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கை பெறப்படல்.

பெறுகை நடைமுறைகளுக்கமைவாக ஆதனங்களைக் குத்தகைக்கு வழங்கி சட்டரீதியான ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்.
இவ்வாறான எந்த நடைமுறையும் இதில் பின்பற்றப்பட வில்லை.

மாநகர கட்டளைச்சட்டத்தின் 227 இன் பிரகாரம் 1500 ரூபாவிற்கும் 1 வருடத்திற்கும் குறைந்த ஒப்பந்தத்திற்கு யாழ்.மாநகர சபை ஆணையாளரும், மாநகர

கட்டளைச்சட்டத்தின் 228 இன் பிரகாரம் 1500 ரூபாவிற்கு மேற்பட்ட தொகைக்கும் 1 வருடத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத்திற்கு யாழ்.மாநர சபை முதல்வாரும் ஆணையாளரும் கையப்பமிடவேண்டும் என்பதுடன் மாநகர இறப்பர் முத்திரையும் பதிக்கப்பட வேண்டும்.

CONTRACTS

227. The Commissioner may, on behalf of the Council, enter into any contract for the execution or performance of any work or service, or for the supply of any articles or materials, involving an estimated expenditure of not more than one thousand five hundred rupees, if the contract will not or is not expected to endure for more than one year. and the necessary funds have been provided for the same in a sanctioned budget or by supplementary budget.

228. Any contract for the execution or performance of any work or service or for the supply of any articles or materials for a Municipal Council, which involves an estimated expenditure of more than one thousand five hundred rupees, or which will or is expected to endure for more than one year, shall, if entered into in Sri Lanka, be reduced to writing, and signed by the Mayor and the Commissioner on behalf of the Council, and sealed with the common seal of the Council, and, in addition to such other matters as may be deemed necessary for inclusion in any such contract,

குறித்த ஒப்பந்தம் 1500 ரூபாவிற்கும் 1 வருடத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தம் எனிலும் அவ் ஒப்பந்தத்தில் யாழ்.மாநகர சபை முதல்வர் மட்டுமே கையெழுத்து இட்டுள்ளார். இது சட்ட ஏற்பாடுகளை மீறும் செயலாகும்.

11 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 2008 அம் திகதி இலங்கையில் உள்ள மாநகர முதல்வர்கள் மற்றும் நகரசபை, பிரதேச சபை தவிசாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் ஒரு திட்டமிடல் குழுவை அமைத்து நகர அபிவிருத்தி தொடர்பான மற்றும் கட்டிடங்கள் தொடர்பான விண்ணப்பங்களை குறித்த திட்டமிடல் குழுவில் விவாதித்து அதன் அடிப்படையில் தான் அனுமதி வழங்கப்படவேண்டும் என்று உள்ளது. யாழ்.மாநகர சபையில் குறித்த திட்டமிடல் குழு இருக்கின்ற போதிலும் குறித்த திட்டமிடல் குழுவிற்கே தெரியாமல் இக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அக இவற்றின் அடிப்படையில் உரிய நிர்வாக நடைமுறைகள் அனுமதிகள் எதுவும் இன்றியே இவ் தொலைத் தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகின்றன என்பது வெளிப்படை என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More