179
மானிப்பாய் காவல்துறைப்பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்ற குழுவொன்றின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #மானிப்பாய் #காவல்துறையினர் #துப்பாக்கிச் சூட்டில் #பலி
Spread the love
1 comment
ஒரு அரசு பயங்கரவாதி வழக்கம் போல் ஒரு அப்பாவி நபரைக் கொன்றது போல் தெரிகிறது