155
காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற நால்வர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்த நால்வரும், கொடிகாமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட செல்வரத்னம் கவிகஜனுடன் அலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என காவற்துறையினர் கூறியுள்ளனர்.
Spread the love