இலங்கை பிரதான செய்திகள்

எல்லா தாய்மார்களது கனவுகள் நனவானால் நாடு உருப்படும் :

எல்லா தாய்மார்களது கனவுகள் நனவானாலும் எல்லா பிள்ளைகளும் வல்லவராகவும் நல்லவராகவும் மாறினால் நாடு உருப்படும் என தேசிய நல்லிணக்க அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய கட்டடத்திற்கான (பாலர் பாடசாலை) அடிக்கல் நாட்டு நிகழ்வு மதியம் 2 மணியளவில் நடைபெற்றவேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில்

நேரம் போதாமையால் அமைச்சர் உரையாற்ற கூடாது.தயவு செய்து இன்று வீட்டுக்கு சென்று இந்திய தொலைக்காட்சி மற்றும்  உருப்படாத தொலைக்காட்சி நாடகங்களை பார்க்கின்ற போது இடையில்  மக்களாகிய நீங்கள் உள்நாட்டு தொலைக்காட்சிகளை பாருங்கள்.நான் செய்தியில் வருவேன்.பத்திரிகை வானொலிகளில் கேட்ட பார்த்த நான் தற்போது நேரடியாகவே வந்துள்ளேன்.

நிறைய நிகழ்வுகளில் பங்குபெற உள்ளபடியால் நிறைய பேச முடியவில்லை.இங்கு உள்ள தாய்மாருக்கு பல கனவுகள் உள்ளதை நான் அறிவேன்.தனது பிள்ளை படிக்க வேண்டும்.பல கனவுகள் இருக்கலாம்.தனது பிள்ளை நற்பிரஜையாக வல்லவராக நல்லவராக வரவேண்டும் என்பதாகும்.எல்லா தாய்மார்களது கனவுகள் நனவானாலும் எல்லா பிள்ளைகளும் வல்லவராகவும் நல்லவராகவும் மாறினால் நாடு உருப்படும்.எனது தாய்க்கும் ஒரு கனவு இருந்தது.தனது மகன் நாட்டிற்கு நல்லவராக வரவேண்டும்.நாலு பேர் அவரை போற்றி பாராட்ட  வேண்டும்.அந்த கனவு மெல்ல மெல்ல நனவாகி வருகின்றது.அதை பார்ப்பதற்கு எனது தாய் உயிருடன் தற்போது இல்லை.ஆகவே என் தாயின் கனவுகள் எனக்கு ஞாபகம் இருக்கின்றது.எங்கும் வாழும் தாய்மார்களின் கனவுகளையும் நனவாக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது.யாதும் ஊரே யாவரும் கேளீர்.எனது ஊரும் துறைநீலாவணை தான்.இதற்கு அமைய இந்த ஊருக்கு முதலற்கட்டமாக  10 இலட்சம் ரூபா தந்துள்ளேன்.முதலில் இதனை கட்டுங்கள்.மீண்டும் கிள்ளித்தராமல்  அள்ளித்தருவேன்.நிச்சயமாக இன்னும் பாடசாலை கல்வித்துறைக்கு உதவுவது எனது கடப்பாடு ஆகும் என குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வானது துறைநீலாவணை கண்ணகி சனசமூக நிலைய தலைவர் இ.சுதாகர் தலைமையில் நடைபெற்றதுடன் பிரதம விருந்தினராக அமைச்சர் மனோ கணேசன் மற்றும் அதி விசேட அதிதியாக  கிழக்கு இளைஞர் முன்னணியின் தலைவரும்

அரச கரும மொழிகள் அமைச்சின் கிழக்கு மற்றும் மட்டக்களப்பு மாவட்டஇணைப்பாளருமான க.கோபிநாத் மற்றும் பாடசாலை அதிபர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  #தாய்மார்களது  #கனவுகள் #மனோ கணேசன்

பாறுக் ஷிஹான்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link