தென்னாபிரிக்காவில் உள்ள பாட்சுவானாவில் விலங்குகளை வேட்டை ஆடுவதற்கு எதிரான தடை சட்டம் அண்மையில் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இங்குள்ள மலைப்பகுதிகளில் தந்தங்களுக்காக யானைகளை கொல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக தனியார் நிறுவனத்திற்காக ஆவணப்படம் எடுப்பதற்கு, ஐஸ்டின் சுலிவான் என்ற பத்திரிகையாளர் காட்டுப் பகுதியில் தனது தானியங்கி புகைப்பட கருவியை பறக்க விட்டார். .தன்போது அக் கருவியில் பதிவான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
ஒரு யானை தந்தத்திற்காக தும்பிக்கை வெட்டப்பட்ட நிலையில் தும்பிக்கை தனியாகவும், உடல் பகுதி தனியாகவும் காணப்படும் இப் புகைப்படம் உலக மக்களை பெரும் துரயத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. #உலகை # உலுக்கிய #புகைப்படம் #வேட்டை #தென்னாபிரிக்கா #யானை #தும்பிக்கை