மழையுடனான வானிலையால் இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. வானிலை வழமைக்குத் திரும்புவதால் இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று (22.07.19) இரவு 9 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழையுடனான வானிலை இன்று (23.07.19) முதல் படிப்படியாக குறையக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எனினும் மத்திய, சப்ரகமுவ, மேல், வட மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டது…
163
Spread the love