மகசின் சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டு வந்த அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அமைச்சர் மனோ கணேசன், நேரில் சென்று சந்தித்து இன்னும் இரு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி கடந்த சில தினங்களாக புதிய மகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #அரசியல் கைதி #தேவதாசனின்#உண்ணாவிரதப் போராட்டம் #நிறைவு
Spread the love
[…] அல்லது என்னை தூக்கிலிடுங்கள் அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண… தனது விடுதலைக்கு தானே வாதாடும், […]
[…] அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண… […]