Home இலங்கை புதிய நியமனத்தில் வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலை மறுப்பு

புதிய நியமனத்தில் வெளிவாரி பட்டதாரிகளுக்கு வேலை மறுப்பு

by admin

பதினாறாயிரம் பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பக்களை வழங்குவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதுடன் ஓகஸ்ட் முதலாம் திகதி புதிய நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ள நிலையில் இதில் வெளிவாரிப்பட்டதாரிகள் எவரும் உள்வாங்கப்படவில்லை என வெளிவாரி பட்டத்தை பாதுகாக்கும் அமைப்புக்களின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

. வெளிவாரி பாட்டதாரிகளை உள்வாங்காமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் , பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கவனம் செலுத்தி உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் .

பட்டதாரிகளை உள்வாரி பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் என பாகுபடுத்தாது அனைத்து வேலையில்லா பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒன்றியம் கோரிக்கை விடுத்ததுள்ளது.   #நியமனத்தில்  #வெளிவாரி #பட்டதாரிகளுக்கு #வேலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More