மூதூர் பாட்டாளிபுரத்தில் கபிலர் கல்வித் திட்டத்தில் மாலை நேர இலவச வகுப்புக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 21-07-2019 அன்று பி.ப 4.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 30 வருட கால யுத்ததினால் பாதிக்கப் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்ற மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட சம்பூர் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக கொண்டு கபிலர் கல்வித் திட்டம் எனும் பெயரில் மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மாலை நேர வகுப்புக்கான நிதியினை இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் தமிழ் மக்களினால் வழங்கப்படுகின்றது இத்திட்டமானது தமிழ் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்) கட்சியின் திருகோணமலை மாவட்ட கிராமிய வேலைத்திட்ட இணைப்பளர் திரு.லோ.சின்னக்கிளி தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கலாநிதி இரா.ஸ்ரீஞானேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
ஒவ்வொரு நாளும் மாலை நேர வகுப்பு 3.00 மணியிலிருந்து 6.00 மணி வரை நடைபெறும். இதன் போது மாணவர்களின் போசாக்கை கருத்திற் கொண்டு போசாக்கு உணவாக கடலை, பால், பயறு போன்ற புரத உணவுகள் வழங்கப்படவுள்ளது.