Home உலகம்அசர்பைஜான் அருகே கடலில் மூழ்கிய ஈரான் சரக்கு கப்பலில் இருந்து, பணியாளர்கள் மீட்கப்பட்டனர்…

அசர்பைஜான் அருகே கடலில் மூழ்கிய ஈரான் சரக்கு கப்பலில் இருந்து, பணியாளர்கள் மீட்கப்பட்டனர்…

by admin


அசர்பைஜான் அருகே கடலில் மூழ்கிய ஈரான் சரக்கு கப்பலில் இருந்து 2 இந்தியர்கள் உள்பட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஈரானின் அன்சாலி துறை முகத்தில் இருந்து ரஷியாவில் உள்ள மக்காச்சாலா என்ற இடத்துக்கு டைல்ஸ்களை ஏற்றிக் கொண்டு ‘பாகாங் என்ற சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது. அது ஈரானில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்தக் கப்பலின் 9 ஊழியர்களில் 2 பேர் இந்தியர்கள். மீதமுள்ள 7 பேரும் ஈரானை சேர்ந்தவர்கள். இக்கப்பல் அசர்பைசான் நாட்டின் பகு அருகேயுள்ள லஸ்காரன் துறைமுகம் அருகே சென்ற போது கடலில் மூழ்க தொடங்கியது.

அப்போது மூழ்கி கொண்டிருந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், அவ்வழியே சென்ற அஸர்பைஜான் நாட்டின் கடற்படை ரோந்து கப்பலை நோக்கி உதவி செய்யுமாறு கூச்சலிட்டனர். இதனை அடுத்து 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் ரோந்து கப்பல்கள் அங்கு விரைந்தன. அவர்கள் தீவிர முயற்சி எடுத்து 2 இந்தியர்கள் உள்பட கப்பலில் இருந்த 9 பேரையும் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More