184
பிலிப்பைன்சில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் 5 பேர் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸின் வடபகுதியில் லூசான் தீவில் இன்று காலை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.16 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சில மணி நேரத்துக்குப் பிறகு காலை 7.38 மணிக்கு 6.4 ரிக்டர் அளவில் இரண்டாவதாக நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கங்களில் சிக்கி 5 பேர் பலியாகினர் என்றும், 12 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Spread the love