149
இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப், பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கிழக்காசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் பிரதம பிரதி உதவி செயலாளராக அவர் பணியாற்றுவார். அவர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். கெஷாப் தனது 25 வருடகால அமெரிக்க இராஜதந்திர சேவையில் இந்தியா, மொரோக்கோ, கினியா மற்றும் இலங்கை, மாலைதீவுக்கான தூதுவராகப் பணியாற்றியிருக்கிறார்.
Spread the love