இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

மலை­யகத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்


இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியர் என்ற பெரு­மைக்­கு­ரிய பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார்.

கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர்,  அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு  இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் பேரா­தனை பல்க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகி பொரு­ளி­யலை விசேட பாட­மாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரி­வு­ரை­யா­ள­ராகும் சந்­தர்ப்பம் கிடைத்­தது.

இரண்டு வரு­டங்­களில் நிரந்­தர விரி­வு­ரை­யா­ள­ராகி பின்பு 1969 இல் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொரு­ளியல் முது­மாணி பட்­டத்தைப் பெற்றார். 1974 இல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ராகி கட­மை­யாற்றி வந்த இவர்,  1993 ஆம் ஆண்டு  பொரு­ளி­யல்­துறை பேரா­சி­ரி­ய­ரா­கவும் 1997 இல் துறைத்­த­லை­வ­ரா­கவும்  தெரிவு செய்­யப்­பட்டு  2006 இல் ஓய்வு பெற்றார். தோட்ட வீட­மைப்பு உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்­தாண்டு திட்ட உரு­வாக்­கத்தில்  தொழில் கல்வி சம்­பந்­த­மான குழு­விற்கு தலைமை தாங்கி பல்­வேறு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை செய்தார். தேயி­லையின் செழு­மையும் தொழி­லா­ளர்­களின் ஏழ்­மையும் என்ற ஆய்வு நூலிற்­காக 2015 ஆம் ஆண்டு இவ­ருக்கு சாகித்ய விருது கிடைத்­தது.

தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் மாதச்­சம்­பளம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபா­வாக இருக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்­பதை புள்ளி விப­ரங்­க­ளோடு ஆய்வு செய்து வெளி­யிட்ட இவர், மலை­யக பல்­க­லைக் ­க­ழகம் பற்­றிய செயற்­பா­டு­களில் காத்­தி­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தார்.  அன்­னாரின் பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக கொழும்பு ஜய­ரத்ன மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்டு, இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ளவில் பொரளை கனத்தை மயா­னத்தில் நல்­ல­டக்கம் செய்­யப்­படும்.   #மலை­யகத்தின் #முதல் #பேரா­சி­ரியரான #மு.சின்­னத்­தம்பி 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers