வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இணைந்து நாளை திங்கட்கிழமை(29) முற்பகல்- 10 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடாத்தவுள்ளனர்.
நாடுமுழுவதும் 20 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் வேலைவாய்ப்பு விடயத்தில் வெளிவாரிப் பட்டதாரிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டமை, ஏற்கனவே நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் பெயர்கள் மீண்டும் வேலைவாய்ப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டமை ஆகியவற்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், 2017, 2018 ஆம் ஆண்டில் வெளியேறிய உள்வாரி, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இப் போராடடத்தின் போது மகஜர் கையளிப்பும் இடம்பெறவுள்ளமையினால் , குறித்த போராட்டத்தில் அனைத்து வடமாகாண உள்வாரி மற்றும் வெளிவாரி வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . #யாழ் #கச்சேரி #முன்றலில் #கவனயிர்ப்பு #வடமாகாண #வேலையற்ற பட்டதாரிகள்