கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து அடையாளப் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக, அனைத்துப் பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடுகளை நீக்குதல், எம்.சி.ஏ. கொடுப்பனவை அதிகரித்தல், பல்கலைக்கழகங்களுக்குப் பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்குத் திறந்த போட்டிப் பரீட்சைகளை நடாத்துதல் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை முன்வைத்தே இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக, ஒன்றியத்தின் தலைவர் தம்மிக பிரியந்த தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்குவதாக யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #அனைத்துப் பல்கலைக்கழக #தொழிற்சங்க #பணிப்புறக்கணிப்பினை