பிரேஸிலுள்ள சிறைச்சாலையொன்றில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்குமிடையில் வன்முறை சுமார் 5 மணிநேரம் நீடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வன்முறையின் போது சிறைச்சாலையில் 200 கைதிகள் இருக்கவேண்டிய இடத்தில் 309 பேர் இருந்ததாகவும் ஒரு சிறைச்சாலையில் இருந்த ஒரு குழுவினர் மற்றைய சிறைச்சாலையில் இருந்த கைதிகளை அறையில் பூட்டிவைத்து தீ வைத்தமையால் மூச்சுத் திணறி 57 கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #brazil #பிரேஸில் #சிறைச்சாலை #வன்முறை #பலி