இந்தியாவுக்கு தப்பி சென்ற மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப், நடுக் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாலைதீவு நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த அகமது அதிப். மீது, மாலைதீவு ஜனாதிபதியை கொல்ல முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் அகமதுவுக்கு 15 வருட தண்டனை வழங்கப்பட்டிருந்தது. 3 வருட சிறைத் தண்டனைக்கு பின்னர் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தலைமறைவாகியிருந்தார்
இந்நிலையில் அவர் ஏதாவது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியிருந்த நிலையில் அண்மையில் தூத்துக்குடியிலிருந்து மாலைத்தீவுக்கு சென்ற சரக்கு கப்பல் அங்கு சரக்குகளை இறக்கிவிட்டு அந்தக் கப்பல் தூத்துக்குடிக்கு திரும்பியபோது, கப்பலில் கூடுதலாக சிலர் இருப்பதாக தெரியவந்தது.
இதுகுறித்து இந்திய கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது அதிலிருந்து மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப் கைது செய்யப்பட்டுள்ளார்
இதனையடுத்து அவரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #மாலைதீவு #துணை ஜனாதிபதி #கைது #அகமது அதிப்