இன்னும் எட்டு மாதங்களில் நாடு முழுவதும் 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தியாவின் மிகப் பெரிய நெட்வேர்க் நிறுவனமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஏர்டெல், சமீப காலமாகவே கடுமையான வருவாய் இழப்புகளையும் தொழில் நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.
இந்த ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 2,866 கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில் தனது 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான பணியை ஏற்கெனவே கொல்கத்தாவில் ஆரம்பித்துவிட்ட நிலையில் , 2020 மார்ச் மாதத்துக்குள் நாடு முழுவதும் ; 3ஜி சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை 2ஜி சேவையிலிருந்து 4ஜி சேவைக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தங்களது அலைக்கற்றைகள் அனைத்தும் இனி 4ஜி சேவைக்கானதாக மட்டுமே இருக்கும் என ஏர்டெல் நிறுவன தலைமைச் செயலதிகாரியான கோபால் விட்டல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #3ஜி சேவை #நிறுத்த #ஏர்டெல் #அறிவிப்பு