பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 50 ரூபாய் சம்பள விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்காக அமைச்சர்களின் செயலாளர்கள் மட்டத்தினால் குழுவொன்று பெயரிடப்பட்டுள்ளது. குறித்த குழு நேற்று முன்தினம் ஒன்றுகூடியபோதும் உறுதியான தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எனவே குறித்த அமைச்சுக்களின் செயலாளர்களின் அடுத்த கூட்டத்தின்போது தீர்மானங்களை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அந்தக் குழுவின் கூட்டத்திற்கு முன்னதாக, 50 ரூபாய் சம்பள விடயத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
சம்பள விவகாரம் – சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பிரதமர் பேசுவாரா?
152
Spread the love
previous post