உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 20 பேர் பலி – 24 பேர் காயம்


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் எல் பாசோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியொன்றிலேயே நேற்று சனிக்கிழமை குறித்த துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

அதேவேளை துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டள்ளதாகவும் 21 வயதுடைய பற்றிக் க்ரூசியஸ் எனும் இளைஞரே இவ்வாறு குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   #texas #அமெரிக்கா #துப்பாக்கிச்சூடு #பலி  #காயம்

Shoppers exit with their hands up after a mass shooting at a Walmart in El Paso, Texas, U.S. August 3, 2019. REUTERS/Jorge Salgado NO RESALES. NO ARCHIVES. – RC1BE6FE4C30

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.