தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது. 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்களுக்கு 2995 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடைபெறவுளளது. பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலை வளவில் அனுமதியின்றி எவரும் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்தக் காலப்பகுதியில் அதிபர் அலுவலகங்கள் மூடப்பட வேண்டும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்தார். இதேவேளை, புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, விசேட பஸ் சேவைக்கான திட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பமாகியது..
165
Spread the love
previous post