Home இலங்கை கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

by admin

வீட்டிலுள்ள கயிற்றில் தொங்கி விளையாடிய சிறுவன் ஒருவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த 11 வயதாக சிவபாலன் அச்சயன் என்னும் மாணவனே இவ்வாறு உயரிழந்துள்ளார்.
கடந்த 24ஆம் திகதி வீட்டில் கட்டப்பட்டிருந்த இரு கயிற்றைப் பிடித்து விளையாடி போதே இவ்வாறு சிறுவன் உயிரிழந்ததாக உறவினர்களால் மரண விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கயிறு இறுகிய நிலையில் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றதாகவும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்ற உயிரிழந்ததாகவும் உறவினர் தெரிவித்துள்ளனர்

மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது   #கயிற்றில் #தொங்கி #சிறுவன் #உயிரிழப்பு #அச்சயன்
-மயூரப்பிரியன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More