இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற இந்திய களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர் முடிவில் அந்த அணி 95 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்திய தரப்பில் நவ்தீப் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2, வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து 96 என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியிலக்கினை கடந்து வெற்றியீட்டியுள்ளது . இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது #மேற்கிந்தியத் தீவு #முதலாவது #இருபதுக்கு இருபது #இந்திய அணி #வெற்றி