170
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிப்பட்டுள்ளது
தகவலறிந்து 10க்கு மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் அங்கு சென்று 20க்கு மேற்பட்டோரை பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. #டெல்லி #அடுக்குமாடி #தீவிபத்து #பலி
Spread the love