Home இந்தியா சுஷ்மா சுவராஜ் மறைந்தார்…..

சுஷ்மா சுவராஜ் மறைந்தார்…..

by admin

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.

பாஜகவை சேர்த்த பெண் தலைவர்களில் இவர் முக்கியமான தலைவர். வலிமையான தலைவராக செயல்பட்டு அனைவரிடமும் நற் பெயர் பெற்றவர். கட்சி கடந்து பல அரசியல் தலைவர்களிடம் இவர் நெருக்கமாக பழகி இருக்கிறார். வயது காரணமாக இந்த முறை இவர் லோக்சபா தேர்தலைத் தவிர்த்திருந்தார்.

இந்த நிலையில் இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சுஷ்மா சுவராஜ் மரணமடைந்தார். அவரது மறைவுச் செய்தி கேட்டதும் பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

சுஷ்மா சுவராஜ் வாழ்க்கைப் பயணம்…  

சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்- அமைச்சராக  பதவி வகித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக  26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.

சுஷ்மா சுவராஜ். சட்ட வல்வுலுனரான அவர் உச்சநீதிமன்றி்ல்  நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் தேதி பதவி ஏற்றார்.  மேலும் அவர் டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார  அமைச்சர்  பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.  2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.

# 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

# மே 2008 – 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.

# 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர்.

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.

 

25 வயதிலேயே எட்ட முடியாத உயரத்தை தொட்டவர்.. 

25 வயதிலேயே அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாஜகவின் மூத்த பெண் தலைவர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். பாஜக தலைவர்களில் மட்டுமில்லாமல் அரசியல் உலகிலேயே அதிகம் மதிக்க கூடிய பெண் தலைவர்களில் ஒருவராக சுஷ்மா சுவராஜ் வலம் வந்தார். ஹரியானவை சேர்ந்த இவர், ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை  சிறு வயதில் இருந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். அதே சமயம் சுஷ்மாவின் குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியா வந்தனர்.

இவர் சமஸ்கிருதம் மற்றும் அரச அறிவியல் துறைகளில் பட்டம் பெற்று உள்ளார். அதேபோல் இவர் சட்டமும் பயின்றுள்ளார். 1973ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் சுஷ்மாவழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார்.

1970ல் இவர் அகில பாரதிய வித்யார்த்திய பரீஷித் அமைப்பில் சேர்ந்தார். அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கென தனி பாதையை உருவாக்கினார். கணவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மூலம் சட்டப்பிரிவிலும் கொடி கட்டி பறக்க தொடங்கினார். அதன்பின் அவசரகால நிலையின் போது  சுஷ்மா பார்த்த கொடுமைகளை அடுத்து மொத்தமாக அரசியலில் இறங்கிய அவர் பாஜகவில் இணைந்தார்.

மெதுவாக பாஜகவில் வளர்ந்த இவர் ஹரியானா சட்டசபையில் 1977ல் இருந்து 1982 சட்டமன்ற உறுப்பினராக  இருந்தார். அதன்பின் மீண்டும் 1987 டு 1990 வரை சட்டமன்ற உறுப்பினராக   இருந்தார். 1977ல் ஹரியானாவில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றார். அதோடு 1979ல் ஹரியானா மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார். இத்தனை சாதனைகளையும் பெண்ணாக இருந்து கொண்டு இவர் 27 வயதில் அரசியல் நிகழ்த்தினார்.

1978-1990 வரை அம்மாநிலத்தில் சுஷ்மா கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். அதன்பின் 1998ல் இருந்து டெல்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் உடனே அவர் அந்த பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்குள் நுளைந்தார். 1990ல் இவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1998ல் இருந்து இவர் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.

இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியிலும்  லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து நின்ற இவர், தோல்வி அடைந்தார். தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறையை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதே போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர்,உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தார்.

2009ல் பாஜக லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த பின்பும்கூட, லோக்சபாவில் இவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். உள்துறை அமைச்சராக கடந்த முறை இருந்த போது பல்வேறு மக்களுக்கும்  உதவினார். டிவிட்டர் மூலம் எளிதாக கோடிக்கணக்கான மக்களுக்கு அவசர காலத்தில் உதவினார். இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் கடந்த பாஜக ஆட்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். வெளியுறவுத்துறையில் சிறப்பாக பணியாற்றிய அவர் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் நிற்காமல் தவிர்த்தார்.

இவரது உடல் அப்போதே அரசியலுக்கு ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் இன்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. .  இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இவரது உடலுக்கு முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More